15000 மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் (Photos)


8P1A0461

ஸம் ஸம் பவுண்டேஷன் School with a Smile எனும் வேலைத் திட்டத்தினூடாக வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களைக் கடந்த 5 வருடங்களாக வழங்கி வருகின்றது. இவ்வருடத்துடன் 6000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.

ஒரு பாடசாலைப் பொதியில் ஒரு புத்தகப் பை,அப்பியாசக் கொப்பிகள்,காகிதாதிகள் மற்றும் 1000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்கான ஒரு வவுச்சர் என்பன உள்ளடங்குகின்றன.

அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டைப் புன்னகையுடன் ஆரம்பிக்க 15000 மாணவச் செல்வங்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

இத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 27.11.2018 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து உடுநுவரை, தெல்தொட்டை, மொனராகலை, கொலொன்னாவ, தெஹிவளை, வேவல்தெனிய, திருகோணமலை, வெலிகமை, இரத்தினபுரி, பாணந்துறை, புத்தளம், பொல்கஹவலை ஆகிய இடங்களில் சகல சமூகங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 15000 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இத் திட்டத்திற்காக ரூபா 45 மில்லியன்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்கள் மட்டுமே வழங்கியிருந்ததாக ஸம் ஸம் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.(ஸ)

8P1A0236 8P1A0357 8P1A0394 8P1A0461 SWS 2018  Rathnapura (5) SWS 2018 Welamboda (5) SWS 2018 Weligama (4)

2 comments

  1. This is the way of Buddha teach

  2. Tks keep it up good job god bless you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>