119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம், 167907 பேர் பல்கலைக்கு விண்ணப்பிக்க தகுதி


DoE-sl-01

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்படிப்பைத் தொடர்வதற்காக உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பெற விரும்பும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு வெளியான பரீட்சை முடிவுகளை கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் இன்று (30) காலை 10.00 மணி முதல் பரீட்சைகள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிப்புறப் பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கு பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு சொந்த முகவரிகளுக்கு தபாலிடப்படவுள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோன்றினர். இதில்,  ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை பரீட்சையில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு பரீட்சை முறைகேடுகள் காரணமாக 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. (மு)

 

All Media-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>