டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்துக் கள­மி­றங்கும் எலி­ஸபெத்


அமெ­ரிக்­காவின் செனட் சபை அங்­கத்­த­வ­ரான எலி­ஸபெத் வொரென் 2020ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்துக் கள­மி­றங்­க­வுள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார்.

இவர் ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த மசா­சூசெட்ஸ் மாநி­லத்­தி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்ட, அமெ­ரிக்க பாராளு­மன்ற செனட் அங்­கத்­த­வ­ராவார்.

இவர் 2020 அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

இந்­நி­லையில், தான் இத்­தேர்­தலில் களி­றங்கப் போவ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எலி­ஸபெத் வொரன் (69 வயது) அறி­வித்­த­துடன், தேர்தல் பணி­க­ளுக்­காக ஆராய்ச்சிக் குழு­வொன்­றையும் அமைத்­துள்ளார்.

இத்­தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த ஜனா­தி­பதி ட்ரம்பை எதிர்­கொள்­வ­தற்கு முன், தனது ஜன­நா­யகக் கட்­சியின் சார்­பான ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­ம­னத்தைப் பெறு­வ­தற்­காக உட்­கட்சித் தேர்­தலில் எலி­ஸபெத் வொரன் போட்­டி­யிட்டு வெற்றி பெற வேண்டும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. (ஸ)

One comment

  1. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>