இனவாதத்தை தூண்டி புதிய அரசியலமைப்பு குறித்து அச்சமூட்ட சிலர் முயற்சி- JVP


JVP-Anura-300x172

நாட்டைத் துண்டாடுவதற்கும், இனவாதத்துக்கும் எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் செயற்படும் என அக்கட்சியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

உண்மையை மூடி மறைத்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களை அச்சமூட்டும் அறிவிப்புக்களை முன்வைக்க ஒரு குழு முயற்சித்து வருகின்றது. இவ்வாறு செய்வதற்குக் காரணம் இனவாதத்தை தூண்டி விடுவதாகும். அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கு பல்வேறு கட்டங்கள் உள்ளன. அவற்றைக் கடக்காமல் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முடியாது. இந்த அரசாங்கத்துக்கு அதனைக் கொண்டுவர பாராளுமன்றத்தில் முடியாது.

இது இவ்வாறிருக்கையில், பொய்யாக சமஸ்டி அரசியலமைப்பு, நாட்டைத் துண்டாட முயற்சி என மக்களிடம் அச்சமூட்டும் பிரச்சாரங்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதைய பாராளுமன்றத்தினால் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றி நாட்டை துண்டாடும் சதிகார நடவடிக்கைக்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

 

 

2 comments

  1. Rajapakshe cheat his own race public people’s tax money used tactics race card every time he go to temple but his background is criminal minded play race card he think public peoples is fools Buddha where he teach people become criminal ????

  2. Buddha priest should help more more poor people and love animals Buddha never ever teach to priest bad thinks ask to do good thinks to people but this rajapakshe his motive is politics and race card used misused Buddha teach untill other people point the Buddha race pepole Buddha teach is good way but this rajapakshe is misused the Buddha way and rajapakshe think public people is fools

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>