தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை!


Screen Shot 2019-01-03 at 12.28.02 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாட தீர்மானித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாகப் பணியாற்றிய சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தமது தொகுதிகளில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகளைத் தவிர்த்து வருகின்றனர்.

அதேவேளை இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிர கரிசனை கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குறித்த விடயமானது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>