நான் சந்திரிக்காவுடன் எதனையும் பேச வில்லை -ரெஜிநோல்ட் குரே அறிவிப்பு


reginold cooray

ஜனாதிபதிக்கு எதிராக சதி செய்வதற்கு நான் எனது வீட்டை வழங்கவில்லையெனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க என்னுடன் தனிப்பட்ட ரீதியில் எந்தவித தொடர்பையும் ஏற்படுத்தவில்லையெனவும் வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் ஜனாதிபதிக்கு எதிராக குழுவொன்றை உருவாக்கி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு சதி செய்ததாகவும், அதற்காக தன்னுடைய வீட்டில் கூட்டம் கூடியதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிப்பாராயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுனர் ஒருவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்புடன் இணைந்து தனியாக செயற்படவுள்ளதாக கடுவெல அமைப்பாளர் ஜீ.எச். புத்ததாச தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த ரெஜிநோல்ட் குரேயின் பெயர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் பட்டியலில் இடம்பெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு இவர் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம் பதவி வழங்கப்படாமல் இருப்பதற்கு காரணமா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>