
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆலோசகர் பதவி குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக மேல் மாகாண சபையின் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.
முழுமையாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில், ராஜித சேனாரத்னவின் ஆசீர்வாதத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் வழிகாட்டலில் ஒரு குழு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுகின்றது. இவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுபோன்ற நிலைமையில், கட்சியின் ஆலோசகராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தொடர்ந்தும் வைத்திருப்பது பொருத்தமானது என்று நாம் நினைக்கவில்லை. இவர் தொடர்பில் விரைவில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்று (06) காலை சகோதர வானொலி செய்திச் சேவைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். (மு)