ITN நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்


itn

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவி திலகா ஜயசுந்தர, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் விசேட பிரதிநிதி ஒருவர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஷிரால் லக்திலக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>