“PATH TO SUCCESS” வழிகாட்டல் நிகழ்ச்சி


IMG-20190108-WA0016
அக்குறணை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் PATH TO SUCCESS எனும் தொனிப்பொருளில் அமைந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று 06-01-2019 அக்குறணை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
சாதாரண தர பரீட்சையின் பின்னர் பெறுபேறுகள் வெளிவரும் வரையான காலப்பகுதியை மாணவர்கள் வீணாக்கி விடாமல் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டன. அத்துடன்,  தமக்கான இலக்கை வகுத்து அதனை அடைவதற்கான வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு என்பனவும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.
மாணவர்களின் எதிர்கால நலனிலும் ஆரோக்கியத்திலும் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்தும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.
மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. இளம் பட்டதாரி மாணவர்களின் தற்போதைய மனநிலையை உணர்ந்தவர்களாக தமது சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டதன் மூலம் நட்புடன் தமது வழிகாட்டல்களை முன்னெடுத்துச் சென்றனர்.
மாணவர்கள் எதிர்காலத்தில் தமக்குப் பொருத்தமான துறையை தெரிவு செய்து, தமது இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு உயர்தரத்துக்கான துறை தெரிவு தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், கலை, தொழிநுட்பம், வர்த்தகம் போன்ற துறை தொடர்பான விளக்கங்கள், குறித்த துறை சார்ந்த இளம் பட்டதாரிகளால் வழங்கப்பட்டன.
 இந்த நிகழ்வில் அக்குறணை மாணவர்கள் கல்வி கற்கும்  பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் 34 மாணவர்களும் 115 மாணவிகளும் அடங்குவர். இவர்களுடன்  மாணவர்கள் சிலரது பெற்றோர்களும் கலந்து பயன் பெற்றனர்.
கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆர்வம் மிகுந்த பங்குபற்றலும் பின்னூட்டல்களும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றமையைப் பறைசாற்றியதுடன் இளம் பட்டதாரிகள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வுக்கான முழுமையான அனுசரணையை  HELPING HANDS [Crawley Branch] வழங்கியமை குறிப்பிடத்தக்கது. (மு)
IMG-20190108-WA0016 IMG-20190108-WA0018 IMG-20190108-WA0019 IMG-20190108-WA0021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>