பொலிதீன் பாவனையை முற்றாகத் தடை செய்ய அக்குறணை பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்


Screen Shot 2019-01-09 at 9.52.27 AM

அக்குறணை பிரதேச சபை வரலாற்றில் முதல் தடவையாக பொலிதீன் பாவனையை முற்றாகத் தடை செய்வது தொடர்பில் பிரதேச சபை தலைவர் ஐ.எம்.இஸ்திஹாரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை கட்சி பேதமின்றி பிரதேச சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது

அக்குறணை பிரதேச சபையின் 2019 புதுவருடத்தின் முதலாவது கூட்டம் அளவதுகொடையில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பிரதேச சபையில் பிரேரணையை முன்வைத்து பிரதேச சபை தலைவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
பொலிதீன் தடை தீர்மானம் இவ்வருடம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்பதுடன், அதுவரையான இடைப்பட்ட காலப்பகுதியில் பொலிதீன் பாவனையிலிருந்து மாற்றீடுகள் செல்ல வேண்டிய நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்

இன்று பொலிதீன் பாவனையால் உலக ரீதியாகவும் சூழல் மாசடைந்து வருகின்றது இதனை நிறுத்துவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால் நாளை நாம் பாரிய சூழல் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும் எனவே இன்றே சிந்திந்து செயற்பட வேண்டும்.

எமது சுற்றுச்சூழல், தற்கால சந்ததியினர் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும் பிரதேசத்தினதும் நாட்டினதும் அபிவிருத்தியை இலகாகக் கொண்டும் நிறைவேற்றப்பட்ட பொலிதீன் தடை தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்வது பிரதேச வாசிகள் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்

நிறைவேற்றப்பட்ட பொலிதீன் தடை தீர்மானம் குறித்து பிரதேச மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு விசேட அறிவூட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படும், இதற்குப் பிரதேச சபை பிரிவிலுள்ள சகல மத வழிபாட்டுத்தலம் மற்றும் மத போதகர்களின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளப்படவும் உள்ளன பொலிதீன் பாவனையிலிருந்து மாற்றீடுகளுக்கு செல்வதற்கான காலப்பகுதி முடிவின் பின் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பிரதேச பிரிவில் பொலிதீன் பாவிப்பவர்களுக்கு எதிராக இன, மத, கட்சி பேதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அக்குறணை சபையை பொலிதீன் பாவனையற்ற பிரதேச சபையொன்றாக உருவாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பிரதேச அபிவிருத்தியை முன்னெடுக்கவும் பொலிதீன் தடை தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துப் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச சபை அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டார். (ஸ)

-ராபி சிஹாப்தீன்-

Screen Shot 2019-01-09 at 9.52.41 AM Screen Shot 2019-01-09 at 9.52.35 AM Screen Shot 2019-01-09 at 9.52.27 AM

3 comments

  1. Mohamed Farshard Ismail

    Why you can’t stop sale liquor closed all bar?

  2. Masha Allah.

  3. Masha Allah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>