
பெங்கொக் நகரில் தங்கியுள்ள சவுதி நாட்டைச் சேர்ந்த 18 வயதுடைய ரஹாப் மொஹம்மட் அல் குனான் என்பவரை அகதியாக பதிவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இஸ்லாம் மார்க்கத்திலிருந்து மதம் மாறியுள்ளதனால், தான் மீண்டும் சவுதி நாட்டுக்கு சென்றால் கொலை செய்யப்படலாம் என அந்த யுவதி கூறியுள்ளார். அச்சத்துடன் வாழும் இந்த யுவதி தற்பொழுது ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான முகவர் அதிகாரியின் பொறுப்பில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மு)