கல்முனை மாநகர சபைக்கு 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன LED தெரு மின்விளக்குகள் அன்பளிப்பு


Screen Shot 2019-01-09 at 4.40.07 PM

கல்முனை நகரை ஒளியூட்டும் செயற்திட்டத்திற்கு அமையத் தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனம் 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெரு மின்விளக்குகளை கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீபினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த மின்விளக்குகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

மிகக் குறைந்த மின் நுகர்வினைக் கொண்ட இந்த நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெரு மின்விளக்குகள் இலங்கையில் முதன் முதலாக கல்முனையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்தெருமின் விளக்குகள் அங்கீகரிக்கப்பட்டவர்களின் செல்லிடத் தொலைபேசி ஊடக இயக்கப்பாட்டை செயற்படுத்தக் கூடிய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும்.

அன்பளிப்புச் செய்யப்பட்ட இத்தெருமின் விளக்குகளைப் பொருத்தும் பணி கொரிய நாட்டிலிருந்து வருகைதந்துள்ள பொறியியலாளர்களின் கண்காணிப்பில் இன்று (9) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அழைப்பின் பேரில் தென் கொரிய நாட்டின் எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தின் பிரதித் தலைவி ஹென் யூஜின், கல்முனை மாநகரை ஒளியூட்டும் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு நாளைய தினம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் ரகீப் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். (ஸ)

– எம்.என்.எம்.அப்ராஸ் –

Screen Shot 2019-01-09 at 4.40.14 PM Screen Shot 2019-01-09 at 4.40.07 PM Screen Shot 2019-01-09 at 4.39.17 PM Screen Shot 2019-01-09 at 4.39.30 PM Screen Shot 2019-01-09 at 4.39.53 PM Screen Shot 2019-01-09 at 4.39.49 PM Screen Shot 2019-01-09 at 4.39.43 PM Screen Shot 2019-01-09 at 4.39.23 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>