ஓமான் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா பெற விசேட மென்பொருள்


image_0a236aa6e0

ஓமான் நாட்டுக்குள் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களுக்கு கையடக்கத் தொலைபேசியில் பதிவேற்றக் கூடிய மென்பொருள் ஒன்றின் மூலம் வீசா பெற்றுக் கொள்ளக் கூடிய முறைமையொன்றை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஓமான் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

தற்பொழுது நடைமுறையிலுள்ள முறைமையின் கீழ், ஓமான் பொலிஸ் இணையத்தளத்தின் ஊடாகவும், ஓமான் நாட்டுக்கு பிரவேசிக்கும் போதும் வீசா பெற்றுக் கொள்ள முடிகின்றது.

புதிதாக அறிமுகம் செய்யவுள்ள மென்பொருளின் ஊடாக உயர்ரக சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மென்பொருள் உற்பத்திக்குப் பொறுப்பான கெப்டான் இப்றாஹீம் செய்க் அல் கிந்தி தெரிவித்துள்ளார்.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>