சவுதி வர்த்தக கட்டிட தீ விபத்தில் உயிர் ஆபத்துக்கள் இல்லை


20190107094902fire1

சவுதி அரேபியாவின் ஜேடா நகரிலுள்ள சுல்தான் இளவரசர் மாவத்தையில் உள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் பாரிய தீச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீ மிக வேகமாக பரவ ஆரம்பித்ததாகவும், தீயணைப்புப் படையினரின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வர்த்தக கட்டிடத் தொகுதியின் ஆறாவது மாடியில் மாத்திரம் 497 பேர் காணப்பட்டதாகவும், தீ ஏற்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் எவருக்கும் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட வில்லையென மக்காவின் சிவில் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கேர்ணல் சயீட் பின் சர்ஹான் அறிவித்துள்ளார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>