சுவர் கட்டும் டிரம்பின் யோசனைக்கு அமெரிக்க எதிர்க் கட்சி எதிர்ப்பு


VlJVlZ6Z_400x400

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அதற்காக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம்  ட்ரம்ப் ஒப்புதல் கேட்டுள்ளார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் ஒப்புதல் கிடைக்காமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இவ்வாண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் சுமார் 20 நாட்களாக அரச அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவதாகவும், அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும் டிரம்ப் இந்த சுவர் திட்டத்துக்கு விளக்கம் கூறியுள்ளார்.

இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தொலைபேசி நிகழ்ச்சியில் தோன்றி கூறியுள்ளார்.

இந்த திட்டத்தையே எதிர்க் கட்சியினர் எதிர்க்கின்றனர் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>