அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு


Screen Shot 2019-01-10 at 4.13.10 PM

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரமின் 52ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 105 தனி வீடுகள் இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதற்கமைய பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டப்பகுதிக்கு 50 தனி வீடுகளும், போகாவத்தை தோட்டபகுதிக்கு 55 தனி வீடுகளும் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

பசுமை பூமி வேலைத்திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்கு ஏழு பேச்சர்ஸ் காணியோடு இந்த வீடமைப்பு திட்டம் அமையப்பெற்றுள்ளதோடு, அனைத்துத் தனி வீட்டுத் திட்டத்திற்கும் குடிநீர் வசதி, மின்சாரம், மலசலக்கூட வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் காணப்படுகிறது.

குறித்த ஒரு வீட்டிற்கு 10 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளமையா குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், எம்.ராம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். (கி|ஸ)

Screen Shot 2019-01-10 at 4.13.20 PM Screen Shot 2019-01-10 at 4.13.10 PM Screen Shot 2019-01-10 at 4.13.03 PM Screen Shot 2019-01-10 at 4.12.56 PM Screen Shot 2019-01-10 at 4.12.50 PM Screen Shot 2019-01-10 at 4.12.44 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>