அரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் ஒன்றுசேர மாட்டேன் – திகாம்பரம்


Palani-Thigambaram

அரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் எந்த சந்ர்ப்பத்திலும் ஒன்று சேரப்போவதில்லை என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக தொழிற்சங்க ரீதியில் எந்த பேய் உடனும் கைக்கோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

நாட்டில் குழப்பநிலையான அரசியல் முடிவுக்கு வந்ததன் பின்னர் புதிய அரசாங்கத்தின் ஊடாக மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் ப.திகாம்பரம் ஊடான மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சியின் தடைப்பட்டுள்ள பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் 52வது பிறந்த தினத்தை முன்னிட்டு பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டப்பகுதிக்கு 50 தனி வீடுகளும், போகாவத்தை தோட்டபகுதிக்கு 55 தனி வீடுகளுமாக 105 புதிய வீடுகளை அமைச்சர் மக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக கையளித்தார்.

இதன் போது அங்கு தனிதனியே இடம்பெற்ற இரண்டு கூட்டங்களில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்காக இ.தொ.காவில் முன்னின்று உழைத்து இறையடி சேர்ந்த அமரர். எஸ்.அருள்சாமி அவரின் குடும்பத்தாருக்கு இத்தருனத்தில் தனது துக்கத்தை தெரிவிப்பதுடன் எதிர்வரும் காலத்தில் அன்னாரின் குடும்பத்தினருக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஆசை காட்டிய கருப்புசட்டைகாரர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெறும் 620 ரூபாயை அடிப்படை சம்பளத்திற்கு கையொப்பம் இடவுள்ளனர்.

இவ்வாறு காட்டிக் கொடுப்பார்கள் என்று தெரிந்தே நான் அன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டாம் தொழிலுக்கு செல்லுங்கள் என்று சொன்னேன்.

இந்த நிலையில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக குறைந்த சம்பளத்தை பெற்று தர தயாராக வேண்டாம் என வழியுறுத்துவதாக தெரிவித்தார். அமைச்சர் அரசியல் ரீதியாக பிளவு பட்டாலும் தொழிற்சங்க ரீதியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அழுத்தம் கொடுத்து நியாயமான உயர்வான சம்பளத்தை பெற்றுகொடுக்க முன்வாருங்கள் என அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜியினால் சம்பள உயர்வு தொடர்பில் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தூள்ளார்.

எனக்கு உள்ள அமைச்சு பதவியை துறந்துவிட்டு தயராக உள்ளேன். அதேவேளையில் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியே வாருங்கள் ஒருமித்து போராடுவோம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம் எனவும் கூறினார்.

அத்துடன் காலையில் ஒரு கட்சியில் மாலையில் வேறு கட்சியில் இணைந்து கொண்டு கூத்து காட்டும் ஒருவர் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வருவதென்றால் பொறிமுறை என்ன என கேட்கிறார்.

அதேபோன்று மாகாண சபை உறுப்பினர்கள் ஒருவரும் கேட்கிறார். தொ.தே.சங்க காரியாலயம் மற்றும் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் பொறிமுறையை தருகிறோம் எனவும் கூறினார்.

சம்பள உயர்வுக்கு கூட்டு ஒப்பந்தம் தடையாக உள்ளது என தெரிவித்தால் திகாம்பரத்திற்கு என்ன தெரியும் என்கிறார்கள். எனக்கு எல்லாம் தெரியாமலா அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றேன் என தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக இ.தொ.காவுடன் ஒருகாலமும் ஒன்றினைய மாட்டேன் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபட்டு போராட எந்த பேய் உடனும் கைகாகோர்க தயாராகவுள்ளேன்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியே விடுங்கள் போராடி ஆயிரம் ரூபாவை பெறுவோம். நான் தயார் என தெரிவித்தார்.

அதேநேரத்தில் சம்பளம் தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்காவின் கூற்றுக்கு கண்டனத்தையும் தெரிவித்தார்.(அ)

-க.கிஷாந்தன்-

3 comments

  1. சேர்ந்தும் ஓன்னும் கிழிக்க போரதில்லை

  2. நீ இலங்கை தமிழர்கள் கூட சேர்ந்தா அவர்களும் குடு விக்க வேண்டிய வரும்

  3. யாரும் என்னை கூப்பிட்டு சேர்த்து கொள்ளளனு மனவருத்தம் போல????????????

Leave a Reply to Vilikkumaa Malayagam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>