நாமும் புதிய அரசியலமைப்பு கொண்டுவருவோம், எம்.பி.யாக இருந்தால் வாக்களிக்கலாம்- மஹிந்த


பாராளுமன்றத்தை உடன் கலைக்குமாறும் அடுத்த தமது புதிய அரசாங்கத்தில் தாமும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கு இந்த அரசாங்கத்துக்கு தகுதியில்லையெனவும், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பொன்றையே கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நாட்டை ஒருமைப்படுத்தும் அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதாகவும், இதற்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் முடியுமானால் வாக்களிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத பிரிவு பிரிவாக முன்வைக்கப்படும் அரசியலமைப்பு, பாராளுமன்றத்தின் நன்மதிப்பையும் குறைத்துவிடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

3 comments

  1. Talk bullshed rajapakshe you are corruption minded abused power cheating poor People land and money how you going to do the constitution you can do but you do for your own benifiet right RAJAPAKSHE

  2. You are selfish fellow you Connot be leader ship for any party in srilangka you not capable and your politics is out of order RAJAPAKSHE

  3. ஷாஃபி முஹமத் அன்ஸார்

    13+ கொடுப்பேன் என்று சொன்னதையே காற்றிலே பறக்க விட்ட வெட்கங் கெட்டவன். இவனாவது அரசியலமைப்பபை கொண்டு வர்றதாவது !

    கர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்த் த்தூ த்தேறி !

Leave a Reply to Simon James Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>