பஸ் கட்டண முறைப்பாடு – சுற்றிவளைப்புக்கு முஸ்தீபு


vs-news.s3.us-east-2.amazonaws.comwww.newsfirst.lkbus-strik-0282d56c3f473263a108f78c35bf9a8f0f4aea9d

புதிய கட்டணங்களுக்கமைய பஸ் கட்டணங்களை அறவிடாத பஸ்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, திங்கட்கிழமை (14) முதல் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குட்பட்ட 475 மார்க்கங்களில் சுமார் 5,500 பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. பஸ்களில் பயணிகள் அசௌகரியத்துக்குள்ளாகும் பட்சத்தில், அது குறித்து அறிவிப்பதற்கு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தமது முறைப்பாடுகளை, 011 2 860 860 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>