இலவச மூக்குக் கண்ணாடி விநியோகம்


01

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இலவச கண்பரிசோதனை முகாமில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று தெலும்புகொல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வட மேல் மாகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷாவின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் ரிதீகமபிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.மும்தாஸின் ஏற்பாட்டில், வடமேல் மாகாண சுகாதார மற்றும் மகளிர் விவகாரஅமைச்சுடன் இணைந்து, சமூக சேவைகள் திணைக்களம் குறித்த முகாமை ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று நடைபெற்ற மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வை முன்னாள் ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். மும்தாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தருடன் ரிதீகம பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களஉத்தியோகத்தர்கள் உட்பட ஊர்மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். (ஸ)

– திக்ருல்லாஹ் ஜிப்ரி –

01 02 03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>