ஜனாதிபதி முறைமையை நீக்கினால் இனவாதம் வெடிக்கும் என்பது தவறு- JVP


jvp..

புதிய அரசியலமைப்பு  உருவாக்கப்பட்டால்  நாடு  பிளவடையும் என்று  குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுன கட்சியும் அதனுடன் உள்ள ஸ்ரீ ல.சு.கட்சியும் அரசியல்  செய்வது  வெட்கப்பட  வேண்டிய ஒன்றாகும்  என   மக்கள்  விடுதலை  முன்னணியின்   பாராளுமன்ற  உறுப்பினர்    நளிந்த  ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு  நிபுணத்துவ  குழுவினர்  சமர்ப்பித்த     புதிய  அரசியலமைப்பு  நகல்  தொடர்பில்  வினவிய  பொழுதே  அவர்  இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

புதிய  அரசியலமைப்பு  உருவாக்கம்  ஏன்   நாட்டுக்கு  அவசியம்  என்பதன்  அடிப்படை   தன்மையினை   கூட  அறிந்துக்  கொள்ளாமல்  மஹிந்த உட்பட  அவருடன் தற்போது   கூட்டணியமைத்துள்ள   அவரது  நெருங்கிய  நண்பரான   ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர்   எதிர்ப்பது  முறையற்ற  விடயமாகும்.

மறுபுறம் நிறைவேற்று  அதிகாரம்  கொண்ட   ஜனாதிபதி  முறைமையினை  நீக்கவும்,   மக்களின்  அடிப்படை  உரிமைகளை   பலப்படுத்தி  புதிய  அம்சங்களை  அடிப்படை  உரிமைகளாக    இணைத்துக்   கொள்ளவும்    முயற்சிக்கப்பட்டது.    இவ்வம்சங்களை  உள்ளடக்கிய  புதிய  அரசியலமைப்பு  உருவாக்கப்பட   வேண்டும்  என்பதே    மக்கள்  விடுதலை முன்னணியின்  நிலைப்பாடாகும்.

இவ்விடயத்தில்  இவர்கள்  குறிப்பிடும்  வாதங்கள்  பொருத்த மற்றதுடன்  அரசியல்   நோக்கமாகவே  கருதப்படும்.    நிறைவேற்று  அதிகாரம் கொண்ட    ஜனாதிபதி முறைமையினை நீக்கினால்  இனவன்முறைகள்  இடம்பெறும் என்று    குறிப்பிட்டு  இனவாத  பிரச்சாரங்களை  பகிரங்கமான  பொதுநலவாதிகலாக  முன்னெடுக்கின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.    (மு)

2 comments

  1. Removed presidency of srilangka power

  2. Immediately effectively don’t delay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>