கிரிக்கெட் விளையாட்டுக்கான புதிய சட்ட நகல் மார்ச்சில்


Harin Fernando

கிரிக்கெட்டில் மோசடிகளை தவிர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய விளையாட்டுச் சட்ட நகல் எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படால் 03 மாதத்திலிருந்து 05 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் 05 இலட்சம் முதல் 05 மில்லியன் வரையான தண்டப்பணமும் அறவிடப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  இலங்கை கிரிக்கட் சபையில் இடம்பெற்று வரும் ஊழல் தொடர்பில் தகவல்களை முன்வைக்குமாறு விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவு வழங்கியுள்ள கால அவகாசம் வெற்றியளித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>