இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால போட்டி அட்டவணை வெளியீடு


Sri-Lanka-Cricket

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்து பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

ஜனவரி 24 ஆம் திகதி முதல் இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதனைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி – 20 தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியும் இரண்டாவது போட்டி பெப்ரவரி 21 ஆம் திகதியன்றும் நடைபெறவுள்ளது.

இதன்பின்னர் நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, மார்ச் மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதுடன் மார்ச் 6 ஆம் திகதி இரண்டாவது போட்டியும், மார்ச் 10 ஆம் திகதி மூன்றாவது போட்டியும், மார்ச் 13 ஆம் திகதி நான்காவது போட்டியும், மார்ச் 16 ஆம் திகதி ஐந்தாவது போட்டியும் நடைபெறவுள்ளன.

இதையடுத்து மார்ச் 19 ஆம் திகதி முதலாவது டீ டுவென்ட்டி போட்டியும், மார்ச் 22ஆம் திகதி இரண்டாவது போட்டியும், மார்ச் 24 ஆம் திகதி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(அ)

-ஐ. ஏ. காதிர் கான்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>