வட்ஸ்அப் நிறுவனம் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை


போலியான செய்திகள் மிக வேகமாக பரவுவதை மட்டுப்படுத்துவதற்கு வட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தவகையில், ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் வதந்திகளையும், போலிச் செய்திகளையும் தடுக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது, யார் அனுப்புகிறார்கள், யாரால் பரப்பப்படுகின்றது என்பதைக் கண்காணிக்கும் முறையை வகுத்து வருவதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>