செலான் வங்கி அனுசரணையில் SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு


Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (1)

செலான் வங்கியின் அனுசரணையில் நாட்டிலுள்ள SOS சிறுவர் கிராமங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (22) பிலியந்தலையில் அமைந்துள்ள SOS சிறுவர் கிராமத்தில் இடம்பெற்றது.

செலான் வாங்கி வாடிக்கையாளர்கள் தமது கடன் மற்றும் பற்று அட்டைகளினூடாக மேற்கொண்டிருந்த ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி அதனூடாக இந்த தொகை நாட்டிலுள்ள ஆறு SOS சிறுவர் கிராமங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த நன்கொடைக்கு மேலதிகமாக, SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களுக்கு இடைக் கால பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் இதன்போது செலான் வங்கி வழங்கியது.

இந்நிகழ்வில் சர்வதேச SOS சிறுவர் கிராமங்களின் தலைவர் சித்தார்த்த கவுல், செலான் வாங்கி பிரதிப் பொது முகாமையாளர்களான டிலான் விஜேசேகர, ஜயந்த அமரசிங்க, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் காமிக்க டி சில்வா உள்ளிட்ட செலான் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் பெற்றோரின் அரவணைப்பை இழந்த பிள்ளைகளுக்கு அரவணைப்பு வழங்கி ஆதரவளிக்கும் அமைப்பாக SOS சிறுவர் கிராமங்கள் கடந்த 37 வருட காலமாக இயங்கி வருவதுடன் 6 SOS சிறுவர் கிராமங்கள் பிலியந்தலை, காலி, நுவரெலியா, அனுராதபுரம், மொனராகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

இவற்றில் 41,000க்கும் அதிகமான சிறுவர்கள் காணப்படுவதுடன் தற்போது SOS சிறுவர் கிராமங்களில் 950 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, 3400க்கும் அதிகமான பெற்றோரின் பராமரிப்பை இழக்கக்கூடிய நிலையிலுள்ள பிள்ளைகளுக்கும் ஆதரவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு வயதுகளைச் சேர்ந்த ஆண், பெண் பிள்ளைகள் சகோதர, சகோதரிகளைப் போல SOS சிறுவர் கிராமங்களில் இயற்கையான முறையில் வாழ்ந்து வருவதோடு அவர்கள் சமூகத்துக்கு பங்களிப்பு வழங்கக்கூடியவர்களாக உருவாக்கம் பெறுவதற்கு அவசியமான கல்வி மற்றும் திறன் பயிற்சிகள் போன்றவற்றை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

– நுஸ்கி முக்தார் –

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (1)

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (7)

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (2)

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (3)

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (4)

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (5)

Seylan bank donates 1 million to SOS children villages sri lanka - Daily Ceylon (6)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>