மலேசியாவின் புதிய மன்னராக அஹமட் ஷா: 31 ஆம் திகதி பதவியேற்பு


malayasi444

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமட் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் மலேசியாவின் பெஹேத் பிராந்தியத்தின் மன்னராக செயற்பட்டு வந்துள்ளார்.

மலேசியாவின் மன்னராக செயற்பட்ட சுல்தான் 5 ஆவது முஹம்மத் மன்னர் இராஜினாமா செய்ததன் பின்னர் புதிய மன்னரை நியமிக்க வேண்டிய தேவை மலேசியாவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

59 வயதான புதிய மன்னர் ஐந்து வருட பதவிக் காலத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய மன்னர் ஜனவரி 31 ஆம் திகதி பதவியைப் பொறுப்பெடுக்கவுள்ளார்.

புதிய மன்னராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர், ஆசிய ஹொக்கி சம்மேளனத்தின் தலைவராகவும், சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>