
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழுவொன்று இன்று (28) துருக்கிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணைக் குழு கசோக்கி கொலை செய்யப்பட்ட இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரகத்தில் பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்காக வேண்டி இக்குழு சவுதியின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கடந்த வருடம் துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (மு)