கர்ப்பிணித் தாய்மாருக்கு மீண்டும் போஷாக்கு நிவாரணம்


53d6739d5ee17930d1291975c7ceafa5_XL

கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்கு நிவாரணம் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை லுணுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அரசியல் பயணம் மக்களுக்குக் கூடுதலான சலுகை அளிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டது. நல்லாட்சி அரசாங்கம் பல வருட காலம் அமுலாக்கிய நிவாரணத் திட்டம் சமீபகாலமாக முடங்கியிருந்தது. அதனை மீண்டும் அமுலாக்கி கர்ப்பிணித் தாய்மாருக்கு நன்மை வழங்கப் போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

One comment

  1. விளம்பரத்துக்கு எவ்வளவு ஒதுக்கியிருக்கிறீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>