கடும் பனிப் பொழிவால் தேயிலைக் கொழுந்துகள் கருகும் நிலை – தொழிலாளர்கள் சிரமம்


DSC02641

மலையகத்தில் கடும் பனிப் பொழிவால் தேயிலை தோட்டங்களில் தேயிலைக் கொழுந்துகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களும் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் பிரதேசத்தில் கடந்த வாரம் பொழிந்த பனியினால் பெல்மோரல் தோட்டத்தில் மாத்திரம் 15 ஏக்கர் தேயிலை செடிகள் கருகியுள்ளதாக இத்தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இத் தோட்டத்தில் 80 ஏக்கர் தேயிலை மலைகள் இருக்கின்ற போதிலும் இதில் 15 ஏக்கர் பனியினால் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 60 ஏக்கர் தேயிலை மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்றி இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தோட்ட நிர்வாகத்தினால், தினமும் பறிக்கக் கூறும் 18 கிலோகிராம் தேயிலையைப் பறிக்கமுடியவில்லை எனவும், தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பள உயர்வு விவகாரமும், தற்போது பிரச்சினையாகவே இருக்கின்ற பொழுதிலும் குடும்ப பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், குடும்ப செலவினை சமாளிக்க முடியாத சூழ் நிலையில் இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் அதிகரிக்கும் வரை தமக்கு தோட்ட நிர்வாகம் நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென இத்தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.(அ)

-க.கிஷாந்தன்-
DSC02640

DSC02646

DSC02639

DSC02664

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>