ஐக்கிய அரபு அமீரகத்தில் பாப்பரசர் தலைமையில் விசேட வழிபாடு


kiuy

பிரன்சிஸ் பாப்பரசர் இன்று (03) ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபுதாபி மன்னர் செய்க் மொஹமட் பின் செய்கின் வேண்டுகோளின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பாப்பரசரின் தலைமையின் கீழ் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட வழிபாட்டு நிகழ்வொன்றும் அந்நாட்டில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிகழ்வில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 10 லட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்வதாக சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>