STF படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதி DIG எம்.ஆர். லதீப் நாளை ஓய்வு


mnbg

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவின் கட்டளையிடும் தளபதியாக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) முதல் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவருடைய இறுதி கடமை நாள் இன்று (04) எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 41 ஆண்டுகள் பொலிஸ் சேவையில் இணைந்து நாட்டுக்காக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார். கடந்த இரண்டரை வருடங்களாகவே இவர் கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வருகின்றார்.

போதைப் பொலிஸ் ஒழிப்பு உட்பட நாட்டுக்குள் செற்படும் திட்டமிட்ட சட்டவிரோத குற்றச் செயல்களை மட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு தலைமைத்துவத்தை வழங்கி இவர் செயற்பட்டுள்ளார்.

இவருடைய தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது கடந்த 6 மாதங்களில் மாதங்களில் மாத்திரம் 798 கிலோகிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பில் வெளிநாட்டவர்களுடன் தெஹிவளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரும் தொகை ஹெரோயினும், கொள்ளுப்பிட்டியில் அண்மையில் மீட்கப்பட்ட ஹெரோயினும் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

பேருவளையில் 231 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் வழிகாட்டலின் பேரில் ஆகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)

12 comments

  1. Miss you sir

  2. No…..another…one…year

  3. இந்த ஊடகம் பொய்யான செய்திகளை மட்டும் முந்திக் கொண்டு தருவார்கள் லதீப் சேரின் சேவை காலம் இன்னும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது

  4. EXTENDED
    விசேட அதிரடிப்படையின்(STF) சீனியர் DIG #MR_லத்தீப் அவர்களின் பதவிக்காலம் மேலும் ஒருவருடம் ஜனாதிபதியால் நீடிப்பு.

    நாளைய(5) தினம் அவர் ஓய்வுபெறவிருந்த நிலையில் அவரது சேவையினை பாராட்டி மேலும் ஒரு வருடம் பதவி நீடிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    -அல்மசூறா நியூஸ்

  5. daily ceylon Don’t issu fake news

  6. முட்டாள் ஊடகம்

  7. Daily ceylon த்து…

  8. Daily ceylon த்து…

  9. அட்மின் அவர்களே, செய்திகளை வெளியிடும் போது சற்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பதிவிட்டுள்ள செய்தி இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த தீர்மானம்.

    தற்பொழுது இவரது சேவையை பாராட்டி மீண்டும் ஒரு வருடத்திற்கு சேவைக்காலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>