பல்கலை மாணவர்கள் 8 பேரும் பிணையில் விடுதலை


Screen Shot 2019-02-05 at 3.54.19 PM

ஹொரவபொத்தானை – கிரலாகல புராதன தூபி மீதேறி புகைப்படம் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று கெப்பித்திகொல்லேவ நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

கெப்பித்திகொல்லேவ நீதவான் எச்.கே.மாலிந்த ஹர்சன டி அல்விஸ் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர்கள் மீது மதங்களுக்கு இடையில் முறுகல் ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் பிரவேசித்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும், மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இன்று கட்டளையிட்டுள்ளார். (ஸ)

Screen Shot 2019-02-05 at 3.54.19 PM Screen Shot 2019-02-05 at 3.54.11 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>