அறி­விப்புப் பல­கைகள் இல்லை என்­பதை காரணம் காட்டி தப்பிக்க முடியாது


ancient-ruins-at-Polonnaruwa,-Banner copy

தொல்­பொருள் அமை­வி­டங்களில் அறி­விப்புப் பல­கைகள் இல்லை என்­பதை காரணம் காட்டி, அவ்­வி­டங்­க­ளுக்கு தீங்கு விளை­விக்­கவோ அகௌ­ர­வப்­ப­டுத்­தவோ முடி­யாது என தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பி.பீ. மண்­ட­ா­வல தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்­டி­லுள்ள அனைத்து தொல்­பொருள் அமை­வி­டங்­க­ளிலும் அது தொடர்­பான அறி­வித்தல் பல­கைகளை நிறுவ தொல்­பொருள் திணைக்­க­ளம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்­பொருள் அமை­வி­டங்கள் பெரும்­பா­லா­ன­வற்றில் அறி­விப்புப் பலகை காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மர­பு­ரிமைச் சொத்­து­க­ளான தொல்­பொ­ருட்­களைப் பாது­காப்­பது எமது கட­மை­யாகும். தொல்­பொ­ருட்கள் மீது ஏறி நின்று புகைப்­படம் எடுப்­பதும் அகௌ­ர­வப்­ப­டுத்­து­வதும் தொல்­பொருள் சட்­டத்­தின்­படி குற்றச் செயல்­க­ளாகும். இந்த குற்றச் செயல்­களைப் புரியும் எவரும் தான் அறி­யாமல் அவ்­வாறு செய்­து­விட்­ட­தாக கூறி தப்­பிக்க முடி­யாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடெங்கும் சுமார் 2 இலட்­சத்து 50 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தொல்­பொருள் அமை­வி­டங்கள் உள்­ளன. இவற்றில் சுமார் 25 ஆயிரம் அமை­வி­டங்­களே தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>