தேசிய அரசாங்கம் எனும் பகல் கனவைக் காண்கின்றது அரசாங்கம்- கம்மம்பில


Udaya-Gammanpila

தேசிய அரசாங்க யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியவுடன் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என அரசாங்கத்திலுள்ளவர்கள் பகல் கனவு காண்கின்றார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

கொழும்பு எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்களுக்கு சித்திரைப் புத்தாண்டு பரிசாக அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கே இந்தப் பிரேரணை நாளை கொண்டுவரப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கையிலேயே உள்ளது. ஜனாதிபதிக்கு இருக்கும் அமைச்சர்களை இதனை விடக் குறைக்கவும் அதிகாரம் காணப்படுகின்றது.

ஜனாதிபதி இந்தப் பிரேரணைக்கு எதிராக இருக்கும் நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு போதும் முடியாது எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>