பால்மா கலவை தொடர்பில் வெளிநாட்டுக்கு அனுப்பி பரிசோதிக்கப்படும்- நு.அ.ச.


customer

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் உள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு இதுவரையில் எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர்  எம்.எஸ்.எம் பெளசர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கலப்படங்கள் செய்யப்பட்ட பால்மா இறக்குமதி செய்யப்படுவதாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்ததையடுத்தே அறிந்துகொண்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் கலப்படம் இருப்பதாக முறைப்பாடுகள் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சரும் ரிஷாட் பத்தியுத்தீனும், பிரதியமைச்சர் புத்திக பத்திரனவும் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால், இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளோம். தேசிய ரீதியில் உள்ள ஆய்வு கூடங்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாமையினாலேயே சர்வதேச ஆய்வு கூடங்களை நாடவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாங்கள் தேசிய ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவற்றிடம் அதி நவீன தொழிநுட்ப வசதிகள் இல்லை எனத் தெரிவித்தன.

சர்வதேச ஆய்வு கூடத்தில் பால்மா வகைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலப்படங்கள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட பால்மா நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், அது மனித பாவனைக்குதவாத பால்மா வகை என்றால் தடைசெய்யப்படும்.

கிடைக்கப்பெறும் சர்வதேச ஆய்வுகூட அறிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் எந்தவித கலப்படமும் இல்லையென சுகாதார அமைச்சர் இன்று உறுதிப்பட பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் எழுந்ததன் பின்னர் உத்தியோகபுர்வமாக ஆய்வுகள் எதுவும் உரிய முறையில் இடம்பெறாத நிலையில், இவ்வாறு உறுதியாக கூறியுள்ளமை பொது மக்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>