விமான விபத்தொன்றில் மரணமான கால்பந்து வீரரான எமிலியானோ சலாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது


Screen Shot 2019-02-08 at 10.56.06 AM

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா அண்மைக்காலமாக பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் தனது அணிக்காக உள்வாங்கியது. கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, ஜனவரி மாதம் 21 ஆம் திகதி மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவர் பயணம் செய்த விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் விமானி குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாயமான விமானம் விபத்துக்குள்ளானது என கண்டறியப்பட்டது.

விபத்திற்குள்ளான விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலம் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து நேற்று சடலத்தினை பரிசோதனைக்குட்படுத்தியபோது, அவ்வாறு மீட்கப்பட்ட சடலம் எலிமியானோ சலாவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>