20 ஆம் திகதி வந்தாலும் அது சட்ட முரண்தான்- தினேஷ் எம்.பி.


dinesh gunawardana

தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை சட்டத்துக்கு முரணானது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வரவு- செலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணையை அரசாங்கம் கொண்டுவர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற குழு அறையில் நேற்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணையை அரசாங்கம் மீண்டும் எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளது.

பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்துக்கு ஐ.தே.க முயற்சிக்கிறது.

அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளை வகிக்கும் நிலையில் தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியானது சட்டத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்பதால் கடந்த 7  ஆம் திகதி  தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதென்றால் பொதுத் தேர்தலுக்கு பின்னர் பெரும்பான்மை ஆசனங்களை கொண்ட கட்சிகள் இணைந்தே அமைக்க வேண்டும். இதனை விடுத்து வேறு சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியாது எனவும் தினேஷ் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>