
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பன இணைந்து கூட்டணி உருவாக்குவதற்கான இணக்கப்பாடு காண்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்தக் குழு கூடுகின்றது. இக்குழுவில் எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுப்பதற்கு தேவையான இரு கட்சிகளிடையேயுமான உடன்பாடுகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். (மு)