தனமல்வில துப்பாக்கிச் சூட்டில் சுதுஹகுரு சுமித் பலி


wpid-shooting-2-mgn48.jpg

தனமல்வில பகுதியில் இன்று (10) நண்பகல் 12.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 42 வயதுடைய சுதுஹகுரு சுமித் எனும் வசந்த என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் இருவர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த சுதுஹகுரு சுமித் என்பவர் 4 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் அப்பிரிவு கூறியுள்ளது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>