யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு 2 மில்லியன் ஒதுக்கீடு – அமைச்சர் ஹக்கீம்


Screen Shot 2019-02-11 at 1.01.31 PM

யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்துக்கு மதில் அமைத்து பரப்பளவை விஸ்தரிக்க முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி, யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (11) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:
கண்டி மாவட்டத்திலுள்ள யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பலவகையான பெளதீகவள பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இல்ல விளையாட்டுப் போட்டி நடாத்துவதற்கு மைதானத்தில் போதியளவு இடவசதிகள் இல்லை. இவற்றை நிவர்த்திக்கவேண்டிய கடைமைப்பாடு எனக்கு இருக்கின்றது.

பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு மதில் அமைத்து பரப்பளவை விஸ்தரிக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கென முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளேன். அதன்பின்னர் மேலதிக ஒதுக்கீடுகளைச் செய்து விளையாட்டு மைதானத்தைப் புனரமைத்து தருவோம்.

ஆசிரியர்களுக்கான மலசலகூட வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. அதனை இந்த வருடத்துக்குள்ளே செய்துதருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை முடிப்பதற்கு நிதியொதுக்கீடுகளை செய்வதற்குத் தீர்மானித்திருக்கிறேன்.

இதுதவிர, பாடசாலையில் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு மாகாண கல்வி அமைச்சுடன் பேசவேண்டும். மாகாணசபை கலைந்துள்ள நிலையில் மத்திய மாகாண ஆளுநருடன் பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Screen Shot 2019-02-11 at 1.01.45 PM Screen Shot 2019-02-11 at 1.01.40 PM Screen Shot 2019-02-11 at 1.01.31 PM Screen Shot 2019-02-11 at 1.01.24 PM Screen Shot 2019-02-11 at 1.01.18 PM

One comment

  1. He told only but not give that sure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>