கோட்டாவின் மனு நிராகரிப்பு


gotabaya

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராகச் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கக் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி நிர்மாணிப்பு குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் குறித்த ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

கடந்த அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>