கொக்கேன் பாவிப்பவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துங்கள் – மஹிந்த


_104040705_gettyimages-1052469356

கொக்கேன் போதைப்பொருள் பாவிக்கும் எம்.பிக்கள் இருப்பார்களாயின் அவர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேன் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்று தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கொக்கேன் பாவிப்பவர்கள் இருந்தால் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும், பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரையும் குற்றஞ்சாட்ட முடியாது, அமைச்சரவையிலுள்ள அனைவருக்கும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது, அவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கொக்கேன் பாவிக்கும் அரசாங்கம் எவ்வாறு போதைப்பொருளை நிறுத்த போகிறது என எதிர்க்கட்சி தசலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>