பிறீமா சிலோன் 40ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகிறது


Screen Shot 2019-02-22 at 10.45.13 AM

ஆசியா கண்டத்தில் காணப்படும் பிரதான மா ஆலையான சிங்கப்பூரின் பிறீமா லிமிடெட், இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

சிங்கப்பூரின் பிறீமா லிமிடெட் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலத்தீன் மொழியில் பிறீமா என்பது “முதன்மை” எனப் பொருள்படும். நிறுவனத்தின் சீன மொழிப் பெயர் “Bai Ling Mai” ஆகும். அதாவது “நூற்றாண்டு காலம் பழமையான கோதுமை” எனப் பொருள்படும்.

சிங்கப்பூரில் சாதாரண மா அலையாகத் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த “பிறீமா” படிப்படியாக வளர்ச்சியடைந்து, குறுகிய காலத்தில் சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துக்கொண்டது. இதில் மலேசியா,ஹொங்கொங், சீனா, இந்தோனேசியா, மற்றும் இலங்கை என்பன பிரதான நாடுகளாகக் காணப்படுகிறது.

இலங்கையில் பிறீமா குழுமத்தின் செயற்பாடுகள், பிறீமா சிலோன், பிறீமா சிலோன் மெஷினரி லிமிடட், பிறீமா க்ரெய்ன் எலிவேற்றர்ஸ், சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், பிறீமா லான்ட் மற்றும் பிறீமா மனேஜ்மன்ட் சேர்விஸ் என்ற பெயர்களில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் பிறீமா சிலோன் நிறுவனத்தின் 40ஆவது ஆண்டு பூர்த்தியைக்கொண்டாடும் முகமாக இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் திருகோணமலை பிறீமா மா ஆலையில் நடைபெறவுள்ளது. இதற்கான கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்றும் நேற்றைய தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளது.

நேற்று இரவு 40ஆண்டு கேக் வெட்டப்பட்டதுடன், விசேட இராப்போசன நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது அலுவலக ஊடகவியலாளர் தெரிவித்தார். (ஸ)\Screen Shot 2019-02-22 at 10.45.13 AM Screen Shot 2019-02-22 at 10.45.37 AM

Screen Shot 2019-02-22 at 10.45.53 AM Screen Shot 2019-02-22 at 10.46.02 AM Screen Shot 2019-02-22 at 10.46.07 AM Screen Shot 2019-02-22 at 10.46.14 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>