”பாகிஸ்தானில் இந்தியா போட்ட ஸ்மாட் குண்டுகள் இஸ்ரேலிய உற்பத்தி”


images

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தீயில் இஸ்ரேல் எண்ணெய் வார்ப்பதாக பிரித்தாதனிய எழுத்தாளரான ‘ரொபட் பிஸ்க்’ குறிப்பிடுகிறார்.

‘இன்டிபென்டன்’ என்ற பத்திரிகையில் அவர் எழுதிய ஒரு கட்டுறையில் அவர் எழுதும் போது, ‘கடந்த பல மாதங்ளாக இஸ்ரேல் இஸ்லாத்திற்கு விரோதமான இயக்கமாகிய ‘தேசிய பாரதிய ஜனதா கட்சியுடன்’ சேர்ந்து செயற்படுவதாகவும் இந்தியா தற்போது இஸ்ரேலின் ஆயுத விற்பனைக்கான பிரதான சந்தையாக மாறியுள்ளதாகவும்’ கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை எதிர்பாராமல் நிகழ்ந்ததல்ல எனக் கூறும் அவர் ‘இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள ‘முஹம்மதின் பயங்கரவாதப் படை’ என அழைக்கப்டும் இயக்கத்தைத் தாக்குவதற்காக உபயோகித்த ‘ஸ்மாட் குண்டுகள்’ இஸ்ரேலியத் தயாரிப்பு’ என இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்திகள் தனது கருத்தை உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறார்.

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காஷ்மீரில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த அமைப்பே உரிமை கோறியது.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இஸ்ரேல் தயாரிப்பான ஸ்மாட் குண்டுகளால் கொல்லப்பட்டவர்கள் என இந்தியா கூறும் 300 க்கும் 400 இடைப்பட்ட பயங்கரவாதிகள் எனப்படுவோர் வெறுமனே மரங்களையும் மலைகளையும் தவிற வேறெதுவும் இல்லை என்கிறார்.

மேலும் அவர், இந்தியா தற்போது இஸ்ரேலிய ஆயுதங்களின் மிகப் பெரிய வாடிக்கையாளனாக மாறியுள்ளது. கடந்த 2017ல் 530 மில்லியன் பவுன்களுக்கு இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட ராக்கட்களில் பல இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களின் போதும், சிரியாவிலும் பரீட்சிக்கப்பட்டவைகள் எனவும் ரொபட் பிஸ்க் கூறுகிறார்.

மியன்மரில் உள்ள சர்வாதிகார இராணுவ அரசுக்கு டாங்கிகளையும், ஆயுதங்களையும், யுத்தப் படகுகளையும் தொடர்ந்தும் இஸ்ரேல் வழங்கிவருவதை இஸ்ரேல்; நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

இதேநேரம் மேற்கு நாடுகள் மியன்மாரின் சிறுபான்மை இனத்தவர்களாகிய ரோகின்ய முஸ்லிம்களை அழித்ததற்காக அந்நாட்டுக்கு எதிராக பல தடைகளையும் விதித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் இந்தியாவுக்கிடையிலான ஆயுத விற்பனை சட்டபூர்வமாகவும், பகிரங்கமாகவும் நடை பெறுகிறது எனவும் ரெபட் பிஸ்க் குறிப்பிடுகின்றார்.

தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காக இக்கட்டுரை ஆசிரியர், இந்தியா இஸ்ரேலுக்கிடையில் நடைபெற்ற இராணுவக் கூட்டுப் பயிற்சியையும், பிரசல்ஸ் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆய்வாளர் ‘ஷீரெய்ல் மல்ஹோத்ரா’ இஸ்ரேலியப் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையினையும் ஆதாரதம் காட்டுகிறார்.

மல்ஹோத்ரா தனது கட்டுரையில் இஸ்ரேல் இந்தியத் தொடர்புகள், ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஏனைய லிகுட் கட்சிகளுக்கு இடையில் உள்ள சிந்தனைகளுடன் இருக்கும் இயல்பான நெறுக்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும் என்கிறார்.

மேலும் இஸ்ரேலின் செயல்களை உட்சாகப்படுத்துவது பலஸ்தீனர்களுடன் அது நடந்து கொள்ளும் விதத்தையும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்யும் யுத்தத்தை நேசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த இணையத்தள இந்துக்களே ஆவர் எனவும் ஷீரெய்ல் மல்ஹோத்ரா தெரிவிக்கின்றார்.

இந்தியா இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுமே தமது அண்டை முஸ்லிம்கள் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் உள்ளனர் என்ற அடிப்படையில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் யுத்தம் தொடுத்துள்ளனர்.

இவ்விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கிறது. இரு நாடுகளுமே காலணித்துவப் பிரிவிணையினால் உருவானவைகளாகும். இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையில் ஏற்படும் போராட்டம் ஒன்றோ தமது உரிமையை மீட்பதாகவோ அல்லது அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிப்பதாகவோதான் அமையும் எனக் கூறி, ‘ராபட் பிஸ்க்’ தனது கட்டுரையை முடிக்கின்றார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையும், இந்திய – காஷ்மீர் பிரச்சினையும் காலணித்துவ வாதிகளினால் உருவானவைகள் என்பதே கட்டுரை ஆசிரியர் முன்வைக்க விரும்பும் கருத்தாகும். (மு)

ஆக்கம் – அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் Naleemi, B.A., SLTS

One comment

  1. Salam Mohamed Raslan

    எங்க காட்டுல் போட்டதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>