முஜிபுர் ரஹ்மான் எம்.பி. ஜனாதிபதிக்கு சவால்


Mujeebur rahman

புதிய வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குரிய ஒதுக்கீடுகளுக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்கள் தீர்மாரனம் எடுத்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தேர்ச்சியாக தமது அரசாங்கத்தை குற்றம்சாட்டியே வருகின்றார். இதனாலேயே எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் பகுதியை புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதிக்கு முடியுமானால், அவருடன் இணைந்து செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடையவும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களுடையவும் ஆதரவைப் பெற்று தமது அமைச்சின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யட்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>