இலங்கை அணி 231 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு


fc35bddda4dc8d4ffcab4341a2f09fd4045e9eb6

இலங்கை – தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடும்படி அழைத்தது.

தென் ஆபிரிக்க அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இம்ரான் தாஹிர் மற்றும் லுங்கி எங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆபிரிக்கா அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.   (மு)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>