தேசிய ஆடை அணியும் ஒருவரே அடுத்த ஜனாதிபதி- வெல்கம சமிக்ஞை


kumara welgama

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஆடை அணியும் ஒருவர்தான் வெற்றி பெறுவார் எனவும், அப்படியான ஒருவர் வந்ததன் பின்னர் எப்படி வந்தார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும், பொதுஜன பெரமுனவிலும் இருப்பவர்கள் ஒரே கருத்தைக் கொண்டவர்களே எனவும், நாம் இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிலேயே உள்ளோம் எனவும் குறிப்பிட்ட அவர், மஹிந்த ராஜபக்ஷவும் இன்னும் சுதந்திரக் கட்சியிலேயே உள்ளார் எனக் கூறினார்.

பொது மக்களில் அதிகமானவர்கள் பொதுஜன பெரமுனவுக்கே விருப்பம். பொதுஜன பெரமுன தனித்துக் கேட்டாலும் அக்கட்சி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும். தேசிய தேர்தல் ஒன்று வரும்போது நாம் இணைந்தே போட்டியிடுவோம்.

இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தப் போவதில்லை. அரசாங்கத்தின் ஒரே இலக்கு ஜனாதிபதித் தேர்தல் ஆகும். எந்தத் தேர்தல் வந்தாலும் எனது தலைவர் மஹிந்த ராஜபக்ஷதான் எனவும் அவர் மேலும் கூறினார்.

களுத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

 

8 comments

  1. என்ன கோமனங்கட்டியவரா

  2. Neenga sajith premadasaya patri yen pesuvathu

  3. Car vangiye naatta nasamaki viduwar

  4. இவரு கொஞ்சநாலாக பய்தியம்மாதிரி உலர்ராரு கோத்தாவுக்கு பயந்து…

  5. Mr champika

  6. Nnatta nasamakkiya soriyanuvalthan ivanukal

  7. அப்போ சம்பந்தன் அய்யாதான் . நமது வோட்டு அய்யாவுக்கே..!!

  8. வேடுவர் தலைவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>