வரவு செலவு திட்டம் 2019 – LIVE VIDEO


Screen Shot 2019-03-05 at 2.09.47 PM

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்வு தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தற்பொழுது சமர்பித்துவருகிறார்.

02:00 – பாரளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.

02:04 – நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு ஆரம்பம்

02:07 – வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உரை ஆரம்பம்

02:22 – என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை

02:25 – சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

02:28 – விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும்

02:30 – இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை

02:31 – தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

02:32 – கறுவாப்பட்டையை ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை

02:33 – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

02:34 – மொரகஹா கந்த திட்டத்திற்கு 12000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

02:35 – மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

02:38 – 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில் மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு

02:40 – அதிவேக வீதி அபிவிருத்திக்கு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

02:45 – நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

02:45 – மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

02:46 – அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

02:47 – சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

02:48 – சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

02:50 – வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு

02:51- 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை

02:52 – வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு “சிஹினமாலிகா” கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

02:53 – சிறைச்சாலைகளில் உள்ள பெரும்பாலானோர் போதைப்பொருளுடன் தொடர்புடையோர் ; அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை.

02:55 – தனியார் நிறுவனங்களிலும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.

02:58 – வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

03:05 – நவீன தொழில்நுட்ப வசதிகள் – குறிப்பாக இணையவழி ஹோட்டல் முன்பதிவு உள்ளிட்டவற்றை விரிவாக்கல் – அதனூடாக சுற்றுலாத்துறையை விரிவாக்கல்

03:08 – கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:12 – இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு

03:13 – நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..

03:14 – ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை

03:15 – தேசிய பூங்காக்களுக்கான அனுமதிச்சீட்டு பணம் 15 சதவீத்ததால் குறைப்பு – வெளிநாட்டு மாணவ சுற்றுலாப்பயணிகளுக்கு மாத்திரம்

03:16 – கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு

03:18 – பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:21 – விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

03:24 – சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு

03:30 – தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை

03:33 – அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.

03:34 – கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.

03:36 – போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை

03:37 – கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:39 – கிராம வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:41 – 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:43 – ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

03:45 – அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பு

03:45 – ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு

03:46 – அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே – கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:47 – ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு. அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு

03:50 – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.

03 :54 – சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.

03:59 – பிளாஸ்ரிக், பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.

04:00 – சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன்

04:05 – இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்

04:11 – புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

04:12 – சுவசரிய அம்பியூலன்ஸ் சேவை விருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு

04:13 – யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு

04:15 – சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

04:16 – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபான உற்பத்திக்களுக்கான விலையில் திருத்தம்

04:17 – ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் ( rush time) 100 ரூபாவால் அதிகரிப்பு

04:20 – கெசினோவுக்கான அனுமதிக் கட்டணம் 50 டொலர்

04:23 – கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவை 5000 ரூபாவாலும் சாதரண சேவை 3500 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்

04:27 – பாராளுமன்ற அமர்வு நாளை புதன்கிழமை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>