நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க ஜே.வி.பி.யிற்கு மஹிந்த நிபந்தனை


rty

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் முறைமை என்பன மாற்றம் செய்யப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியுடன் இன்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இக்கருத்தை முன்வைத்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி எதிர்க் கட்சித் தலைவருடன் இக்கலந்துரையாடலை முன்னெடுக்கின்றது.

இன்று மாலை 4.00 மணிக்கு எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்துகொண்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னனியின் சார்பில், அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் சுனில் ஹதுன்னெத்தி ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர். (மு)

rty

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>