50 ஓவர்களை விளையாட தென்னாபிரிக்காவுக்கு வாய்ப்புக் கொடுக்க வில்லை


popp

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று (06) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி அழைத்தது.

தென் ஆபிரிக்கா அணி சார்பில் குவீன்டன் டி கெக் 70 பந்துகளுக்கு முகம்கொடுத்து 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.  இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய திஸர பெரேரா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ள இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி 252 ஓட்டங்களைப் பெற வேண்டும். முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறத் தவறிமை குறிப்பிடத்தக்கது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>